ஒத்தி வைத்த கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தீர்மானம் நிறைவேற்றம்
5/14/2022 12:51:02 AM
செய்யூர்: தமிழகம் முழுவதும் மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி, அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபா கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால், பல பகுதிகளில் கிராமசபா கூட்டங்கள் பல்வேறு காரணங்களால் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இதேபோல், செய்யூர் ஊராட்சியிலும் வரவு செலவுக்கு குறித்து ஏற்பட்ட சலசலப்பால் கிராமசபா கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், செய்யூர் கிராமசபா கூட்டம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் லோகாம்பிகை ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் திவாகர் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் சுதா வரவேற்றார். கூட்டத்தில், மகளிர் சுய உதவி குழுவின் கூட்டமைப்பை கலைத்துவிட்டு, புதிதாக கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசு கொண்டு வந்த மஞ்சப்பை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, பள்ளி கழிப்பறைகளை வாரம் ஒருமுறை தூய்மை படுத்த வேண்டும். கிராமத்தில் குடிநீர் வினியோகிக்கும் கைப்பம்ப், விசைப் பம்ப், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை முறையாக பராமரிக்க வேண்டும். அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதற்கிடையில், அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஊராட்சி வரவு செலவு கணக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டு, கிராமசபா கூட்டம் சுமுகமாக நடந்து முடிந்தது. இதில், ஒன்றியக்குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், கவுன்சிலர் மோகனா கோபிநாத், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமி மகேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!