குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை
5/14/2022 12:10:05 AM
நாகர்கோவில், மே 14: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக காற்று வீசியது.இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் பல பகுதியில் சிறிது நேரம் மழை பெய்தது.நேற்று மாவட்டத்தில் வெயிலின் தாக்கும் குறைந்து காணப்பட்டது. வானம் மேகமூட்டத்திடன் காணப்பட்டது. அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் குறைந்த அளவு மழை பெய்தது. இதனால் அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 41.60 அடியாக உள்ளது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. அணைக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 16.49 அடியாக உள்ளது. பொய்கை அணையின் நீர்மட்டம் 18.10 அடியாகவும், சிற்றார் 1 அணை நீர்மட்டம் 9.94 அடியாகவும், சிற்றார் 2 அணை நீர்மட்டம் 10.04 அடியாகவும் உள்ளது. நேற்று முன்தினம் குருந்தன்கோட்டில் அதிக பட்சமாக 8.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!