கன்னியாகுமரியில் பைக் அரசு பஸ் மோதல் மாணவர் உள்பட 2 பேர் பலி: வாலிபர் படுகாயம்
5/14/2022 12:09:53 AM
கன்னியாகுமரி, மே 14 : குமரி மாவட்டம் களியக்காவிளையில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. கன்னியாகுமரி பஸ் நிலையத்துக்குள் செல்ல பஸ்சை டிரைவர் திருப்பினார். அப்போது கோவளம் கன்னியாகுமரி சாலையில் வேகமாக வந்த பைக் ஒன்று எதிர்பாராதவிதமாக பஸ் மீது பலமாக மோதியது. அந்த பைக்கில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். பைக் மோதிய வேகத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தனர். மற்றொருவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.விபத்து குறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். மேலும் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், இறந்தவர்கள் சாமிதோப்பை சேர்ந்த சொரிமுத்து மகன் தேவ ஜாஸ்பர் (20) மற்றும் சாமிதோப்பு அருகே வடக்கு கரும்பாட்டூரை சேர்ந்த துரை மகன் ஷைஜின்(20) என்பது தெரிய வந்தது.மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர், தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த டேனியல் ஜெயராஜ் மகன் பிரவீன் (18) எனவும் தெரிகிறது. இதில் தேவ ஜாஸ்பர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை ெசய்து வந்துள்ளார். ஷைஜின் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!