குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு
5/14/2022 12:09:48 AM
குளச்சல், மே 14: குளச்சலை தங்குதளமாக கொண்டு 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலில் மீன்பிடித்து வருகின்றன. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான அசானி புயல் காரணமாக, குளச்சல் கடல் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்று வீசி வருகிறது. ேமலும் அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இதனால் ஆழ்கடலுக்கு செல்லும் பெரும்பாலான விசைப்படகுகள் கடந்த 2 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் ஏற்கனவே சென்றிருந்த விசைப்படகுகளும் அவசரமாக கரை திரும்பின. இதனால் குளச்சல் ஏலக்கூடத்துக்கு மீன் வரத்து மிகவும் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் பைபர் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றிருந்தனர். சூறைக்காற்று காரணமாக கடலுக்கு செல்லாததால், குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதே போல் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் தூத்தூர், இனயம் மண்டலத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். இனயம் மண்டலத்துக்குட்பட்ட இனயம், சின்னத்துறை, இனயம் புத்தன்துறை, முள்ளூர்துறை, ராமன்துறை, மிடாலம் , ஹெலன்நகர் ஆகிய கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களும் தூத்தூர் மண்டலத்துக்குட்பட்ட இரவிபுத்தன்துறை, சின்னத்துறை, தூத்தூர் , வள்ளவிளை, மார்த்தாண்டன்துறை, நீரோடி ஆகிய கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர் . இவர்கள் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் , 4000க்கு மேற்பட்ட கட்டுமரங்கள் , பைபர் படகுகள் மூலமும் மீன்பிடித்து வருகின்றனர்.வங்கக் கடலில் புயல் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து அரசு கடலில் மீன்பிடிக்க செல்ல கூடாது என மீனவர்களுக்கு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறையில் உள்ள 700க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் 4000 மேற்பட்ட கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!