சிதிலமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
5/14/2022 12:07:37 AM
திருச்செங்கோடு, மே 14: மல்லசமுத்திரம் ஒன்றியம், மொரங்கம் கிராமத்தில் 800க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.
தற்போது இத்தொட்டி ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்துள்ளது. இத்தொட்டி மூலம் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன், மேல்நிலை தொட்டி உறுதித்தன்மையை இழந்ததால் ஊராட்சி நிர்வாகம் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதை நிறுத்தி விட்டது. தொட்டி சிதிலமடைந்து உள்ளதால், எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழ வாய்ப்புள்ளது. குழந்தைகள் தொட்டி அருகே விளையாடி வருவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுசம்மந்தமாக, மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் விரைந்து ஆய்வு மேற்கொண்டு, அசம்பாவிதம் நிகழும் முன்பு, தொட்டியை இடித்து புதியதாக கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
மாவட்டம் முழுவதும் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு
ஆவத்திபாளையம் அரசு பள்ளியில் ஆங்கில வழி கல்வி கேட்டு பெற்றோர்கள் தர்ணா
களங்காணி கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இளம் கதை சொல்லி விருது
வளர்ச்சி திட்டப்பணிகளை குறித்த காலத்திற்குள் முடிக்க வேண்டும்
போதமலைக்கு சாலை அமைக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதி
திருச்செங்கோடு கூட்டுறவு சங்கத்தில் ₹17.5 லட்சத்திற்கு பருத்தி, எள் ஏலம்
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!