அசானி புயலால் 4 நாட்களுக்கு பின் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்
5/14/2022 12:04:37 AM
வேதாரண்யம், மே 14: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அசானி புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், கோடியக்கரை, மனியன்தீவு உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000க்கும் மேற்பட்ட மீனவர்கள் 4 நாட்களாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்தது.மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது இன்று (நேற்று) பைபர் படகுமீனவர்கள் மீன்பிடிக்க. செல்லலாம் என மீன் துறை அறிவிப்பு செய்தனர். இதையொட்டி நேற்று மீனவர்கள் பைபர் படகில் மீன்பிடிக்க சென்றனர். 4 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த மீனவர்கள் நேற்று அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உற்சாகமாக மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!