SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பரிதாப பலி

5/14/2022 12:04:30 AM

நாகை,மே 14: நாகையை அடுத்த பொரவச்சேரி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (42). நாகை பழைய பேருந்து நிலையத்தில் பழக்கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று முந்தினம் மாலை நாகை தனியார் பள்ளியில் படிக்கும் தனது குழந்தையை அழைப்பதற்காக பொரவச்சேரியில் இருந்து பைக்கில் நாகை சென்றார். நாகை வ.உ.சி. தெரு இருகே சென்ற போது, மதுரையில் இருந்து நாகை வந்த அரசு பேருந்து கார்த்திக் பைக் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். இதனால் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்தவெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை கைப்பற்றி பிரோத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்