இருக்கன்குடிக்கு வேண்டும் நிரந்தர பஸ்நிலையம்
5/13/2022 6:04:41 AM
சாத்தூர், மே 12: சாத்தூர் அருகே அர்ச்சுனா ஆறும், வைப்பாறும் இனையும் இடத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை வழிபட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஆனால் வரும் பக்தர்கள் எந்தவித வசதியும் இங்கு இல்லை என புலம்பும் சூழ்நிலை உள்ளது. திருவிழா காலங்களில் மட்டும் தற்காலிகமாக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி செல்ல ஏற்பாடு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் வரும் பக்தர்கள் மிகவும் சிரமபடுகின்றனர். மேலும் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பெண் பக்தர்கள் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. எனவே இங்கு வரும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு நிரந்தரமாக நிழற்குடையோடு கூடிய பஸ் நிலையத்தை அமைக்கவும், சுகாதாரத்தை பேண சுகாதார வளாகங்கள் அமைக்கவும், குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவும் மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருவில்லிபுத்தூரில் ஒன்றிய அரசை கண்டித்து கூழ் காய்ச்சும் போராட்டம்
புதுக்கோட்டை ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவக்கம்
கோட்ட அளவில் மே 17ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகாசி யூனியனில் பயிற்சி முகாம்
உத்தமபாளையத்தில் வழக்கறிஞர்களுக்கு பாராட்டு விழா
செவிலியர் தினம் கொண்டாட்டம்
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!
நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .
50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!