பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்கள் கைது
5/13/2022 5:58:40 AM
திருப்பூர், மே 13: திருப்பூர் பி.என்.ரோடு போயம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புவனேஷ்வரி (40). இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 3ம் தேதி புவனேஷ்வரி மார்க்கெட்டில் பூ வாங்கி விட்டு மொபட்டில் போயம்பாளையத்திற்கு சென்று கொண்டிருந்தார். பிச்சம்பாளையம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பைக்கில் வந்த வாலிபர் 2 பேர் திடீரென புவனேஸ்வரி கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இது குறித்து புவனேஷ்வரி கொடுத்த புகாரின் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சங்கிலி பறிப்பு சம்பவம் தொடர்பாக திருப்பூர் காந்திநகரில் வசிக்கும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரன் (27), ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜகுமார் (29) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!