மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
5/13/2022 5:57:37 AM
ஊட்டி, மே 13: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக் கொள்ளும் விழா நடக்கும் இடம் மற்றும் மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பின் மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் வரும் 20ம் தேதி துவங்கி 24ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடக்கிறது. இந்த கண்காட்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக, வரும் 19ம் தேதி அவர் ஊட்டி வருகிறார்.
தொடர்ந்து, 21ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இவ்விழா ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடக்கிறது. விழா நடக்க ஒரு வாரமே உள்ள நிலையில், பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் அரசு கலைக்கல்லூரி மைதானம் மற்றும் தாவரவியல் பூங்கா மைதானத்தில் நடந்து வருகிறது. இப்பணிகளை வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், தொழில்துறை அமைச்சர் சி.வி.கணேசன் ஆகிேயார் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, கலெக்டர் அம்ரித் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!