பூமி பூஜை தொண்டாமுத்தூரில் புது போர்வெல் கவர்னர் ஆர்.என்.ரவி.கோவை வந்தார்
5/13/2022 5:57:17 AM
பீளமேடு, மே 13: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று(வெள்ளிக்கிழமை) நடைபெறும் பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று மதியம் விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை வந்தார். அவர் வந்த விமானம் 25 நிமிடங்கள் தாமதமாக 2.40க்கு வந்தது. அவரை மாவட்ட கலெக்டர் சமீரன், மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். அதன்பின்னர் அவர் கார் மூலம் மதியம் 3 மணிக்கு பாரதியார் பல்கலைக்கழகம் புறப்பட்டு சென்றார்.கவர்னர் கோவை வருகையையொட்டி விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. கோவை அவினாசி சாலையிலிருந்து விமான நிலையம் வரை உள்ள பிரதான சாலை மற்றும் சேவை சாலையோரம் இரு சக்கர வாகனங்கள் உள்பட எந்த வாகனத்தையும் நிறுத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இதே போல விமான நிலையத்திலிருந்து பாரதியார் பல்கலைக்கழகம் வரை உள்ள சாலையின் இரண்டு பக்கமும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.தொடர்ந்து பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பாரதியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், மாணவ-மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். இதில் துணை வேந்தர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
அழகுநாச்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருட்டு
நாச்சிபாளையத்தில் சீரான குடிநீர் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் மக்கள் மறியல்
ஊருக்குள் யானை வருவதை முன்கூட்டியே அறிய உதவும் கருவி பொறுத்தும் பணி தீவிரம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!