SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவக உரிமையாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

5/13/2022 5:56:26 AM

ஈரோடு,மே13:  ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது.  ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் உயிரிழந்ததையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகதுறை, ஈரோடு மாவட்ட உணவுப் பாதுகாப்பு பிரிவு சார்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள உணவக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உணவு சமைக்கும் முறை குறித்தும், மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் உணவக உரிமையாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் தங்க விக்னேஷ் தலைமை வகித்து பேசியதாவது:உணவுப் பொருட்களை வினியோகம் செய்யும் நிறுவனங்கள்,உணவுப் பாதுகாப்புத் துறையிடம் இருந்து பெறப்பட்ட சான்றிதழை பெற வேண்டும். அனைத்து பொருள்களுக்கும் ரசீது பெற வேண்டும். உணவகங்களில் பணியாற்றும் ஊழியரில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.அசைவ உணவகங்களில் அன்றைய தினத்துக்குத் தேவையான இறைச்சிகளை மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும். சமைத்த உணவுப் பொருள்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்தக்கூடாது.மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வார காலத்தில் உணவகங்களில் மேற்கொண்ட சோதனைகளில்,50 கிலோ கெட்டுப்போன இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு ரூ.23 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்