வீரராகவர் கோயில் தேர் திருவிழா கோலாகலம்
5/13/2022 5:51:41 AM
திருவள்ளூர்: 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நாள் தோறும் காலையும், மாலையும் வெவ்வேறு வாகனத்தில் உற்சவர் குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு வழியாக பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 7 ம் நாளான நேற்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும் 70 டன் எடை கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. திருதேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வைத்திய வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து புறப்பட்டு குளக்கரை வீதி, வடக்கு ராஜவீதி, பஜார் வீதி, மோதிலால் தெரு என நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை வந்தடைந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்
மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு குறித்து கள ஆய்வு
செல்போன் பறிப்பை தடுத்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு
ஆவடி காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்புக்கு பிரத்யேக வலைதளம்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: எம்எல்ஏ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
பொன்னேரியில் 2,278 பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி
சட்டமுறை எடையளவு பின்பற்றாத 45 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: உதவி ஆணையர் எச்சரிக்கை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...