விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டம்
5/12/2022 5:48:12 AM
போச்சம்பள்ளி, மே 12: போச்சம்பள்ளி வட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க சிறப்பு கூட்டம் என். தட்டக்கல் சமுதாய கூட்டத்தில் நேற்று நடந்தது. மாதலிங்கம் தலைமை தாங்கினார். பிரகாஷ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட தலைவர் சபாபதி, மாவட்ட செயலாளர் கந்தன், வட்ட தலைவர் கந்தன், வட்ட செயலாளர்கள் சின்னசாமி, சாமு ஆகியோர் பேசினர். கடல் வேந்தன், பெரியசாமி, சின்னசாமி, மாதன், சாந்தமூர்த்தி, அன்பரசு, மகாலிங்கம், முபாரக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் இடது புறக்கால்வாய் அமைத்திட வேண்டும், பாலேகுளி ஏரி முதல் சந்தூர் வரை உள்ள 28 ஏரிகளுக்கு நீர் நிரப்பிட நிலம் தந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். போச்சம்பள்ளி தாலுகாவில் சூறாவளி காற்றால் பல டன் மாங்காய் உதிர்ந்தது. இதனால் மா விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்து மா விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் கூலி ₹273 வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் செய்திகள்
ஆசிரியை வங்கி கணக்கில் ₹25 ஆயிரம் அபேஸ்
மாயமான மாணவிகள் நள்ளிரவில் மீட்பு
வாலிபரிடம் தங்க மோதிரம் பணத்தை பறித்தவர் கைது
கலைஞர் கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவுநாள் சேலத்தில் திமுகவினர் அமைதி ஊர்வலம்
பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
அனைத்து ரயில் பாதைகளும் மின்மயம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!