SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிகேஆர் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

5/12/2022 5:38:00 AM

கோபி, மே 12:  தமிழகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்தும், துணிப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் தமிழக அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கோபி பேருந்து நிலையத்தில் ரோட்டரி கிளப் சார்பிலும், பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரி சார்பிலும், அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ரோட்டரி சங்க தலைவர் கார்த்திகேயன் தலைமையில், கோபி கோட்டாட்சியர் பழனிதேவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியில்  பிகேஆர் மகளிர் கலைக்கல்லூரியை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் ஒழிப்பு அவசியம் குறித்தும், பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். கோபி பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி அண்ணாபாலம், கச்சேரிமேடு, கள்ளிப்பட்டி வழியாக சாந்தி திரையரங்கு வரை சென்றது. நிகழ்ச்சியில் கோபி அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, மாவட்ட ஆளுநர் சண்முகசுந்தரம், துணை ஆளுநர் கோதண்டராமன், செயலாளர் சத்தியசீலன், டாக்டர். பாலமுருகன்,நகராட்சி சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • kite_chennai

    மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!

  • poland-fish-16

    போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!

  • ruto-wins-presidency

    கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..

  • ragul-inde-15

    டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

  • independence-15

    75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்