தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 சவரன், 1 கிலோ வெள்ளி திருட்டு
5/12/2022 12:45:34 AM
திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம் பண்ணூர் சூசையப்பர் தெருவை சேர்ந்தவர் பிரபு (30). இவர் தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சத்தியபிரியா (25). இவர்கள் கடந்த 7ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு திருப்பதி கோயிலுக்கு சென்றனர். நேற்றுமுன்தினம் காலை அவர்களது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது பார்த்து அக்கம்பக்கத்தினர் செல்போனில் சத்யபிரியாவுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். பீரோவில் வைத்திருந்த கம்மல், மூக்குத்தி, வளையல், செயின் உள்பட 5 சவரன் நகைகளும் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும் கொள்ளைப்போனது தெரியவந்தது.
இதுபற்றி சத்தியபிரியா கொடுத்துள்ள புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கைரேகை நிபுணர்கள் வந்து கதவு, பீரோவில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை சேகரித்து சென்றனர். மோப்ப நாய் வீட்டில் இருந்து கொஞ்ச தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது.
மேலும் செய்திகள்
கொரட்டூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
ஊராட்சி தலைவரை கண்டுபிடித்து தருமாறு மாவட்ட கலெக்டரிடம் கிராம மக்கள் புகார்
மீன்பிடி மற்றும் மீனவர் நலன் பல்நோக்கு பண்ணை குட்டைக்கு ஒப்புதல் கலெக்டர் அறிவிப்பு
உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற தீர்மானம்
சாலையில் பிறந்தநாள் கொண்டாடியபோது இரு தரப்பினர் திடீர் கோஷ்டி மோதல் திருவள்ளூர் அருகே பரபரப்பு
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...