SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெற்றோர் இசைவுடன் மாணவர் விருப்பத்தின் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் கோடை விடுமுறையில் செயல்படும் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

5/11/2022 5:30:34 AM

நாகர்கோவில், மே 11: பெற்றோர் இசைவுடன் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் கோடைவிடுமுறையில் செயல்பட அனுமதி என்று தெரிவித்துள்ள கல்வித்துறை, அது தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. ஒன்று முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இல்லம் தேடி கல்வி மையங்கள் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களை (மே) நடப்பு மாதம் நடத்துவது தொடர்பாக தன்னார்வலர்களிடம் கருத்துகேட்கப்பட்டது. அதன்படி மே மாதத்தில் இல்லம் தேடி கல்வி மையங்கள் இயங்குவது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக இல்லம் தேடி கல்வி சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 13ம் தேதி வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு மாணவர்கள் தயார் செய்வதற்கு மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் உதவி செய்யலாம். கோடைகாலங்களில் இயல்பான வகுப்பை தவிர்த்து வாசித்தல், கதை சொல்லுதல் போன்ற செயல்பாடுகளை செய்யலாம். இதற்காக பள்ளிகளில் வழங்கப்பட்டுள்ள புத்தக பூங்கொத்து மற்றும் பள்ளி நூலகங்களில் உள்ள நூல்களையும் வாசிப்பு இயக்கத்திற்காக தன்னார்வலர்களுக்கு வழங்கலாம்.

கோடை விடுமுறை காலங்களில் இல்லம்தேடி கல்விக்கு வர விரும்பும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுக்கலாம். மாணவர்கள் கல்வி பயில எந்த தடையும் இல்லை. கோடை விடுமுறை காலங்களில் வகுப்புகள் நடைபெறும், அதில் மாணவர்கள் பங்கேற்கலாம் என்பது குறித்த தகவல்களை பெற்றோருக்கு தன்னார்வலர்கள் தெரிவிக்க வேண்டும். பெற்றோர் இசைவுடன் மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் தன்னார்வலர்கள் இல்லம் தேடி கல்வி நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வெளியூர் செல்லும் மாணவர்கள் வெளியூர் செல்லும் இடத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் மாலை நேரங்களில் கற்கலாம். வெளியூர் சென்ற மாணவர்கள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திரும்பிய பிறகு இல்லம் தேடி கல்வி மையத்தில் தொடர்ந்து பயிலலாம். விடுமுறை கோரும் தன்னார்வலர்களுக்கு மே 14 முதல் 31 வரை விடுமுறை வழங்கப்படுகிறது.

ஜூன் முதல் வாரத்தில் இருந்து இல்லம் தேடி கல்வி மாணவர்கள் பங்கேற்கும் வாசிப்பு இயக்கம் நடைபெற உள்ளது. இதற்கு தயார்படுத்தும் வகையில் மாணவர்களை நூலகங்களுக்கு அழைத்து சென்று நூல்கள் படிப்பதற்கு கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் வாசித்தல் திறனை அதிகப்படுத்த ‘கூகுள் ரீட் அலாங்’ செயலி மூலம் வாசித்தல் இயக்கம் நடத்தப்பட உள்ளது. இதற்கான பயிற்சியை தன்னார்வலர்கள் இணைய வழி கற்றுக்கொள்ள வேண்டும். எதிர் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட வேண்டிய சிறப்பு முயற்சிகள் குறித்து தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுடன் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். அரசு பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்க்க உதவும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் மாவட்ட அளவில் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கவுரவிக்கலாம். இல்லம் தேடி கல்வி மாணவர்களுக்கு நடத்தப்படும் அடிப்படை ஆய்வு நடைமுறையை மே 13ம் தேதிக்குள் தன்னார்வலர்கள் அனைத்து மாணவர்களுக்கும் நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்