கன்னியாகுமரியில் பிரபல ரவுடி லிங்கம் மகன் குண்டர் சட்டத்தில் கைது
5/11/2022 5:30:22 AM
நாகர்கோவில், மே 11 : கன்னியாகுமரி நாச்சியார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முத்துலிங்கம் என்ற லிங்கம். இவர் பிரபல ரவுடியாக இருந்து கொலை செய்யப்பட்டவர் ஆவார். இவரது மகன் சுஜித் (29). இவரும் ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது தென்தாமரைக்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. சமீபத்தில் கன்னியாகுமரி போலீசார் மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கில் இவரை கைது செய்திருந்தனர். இவர் தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் , கலெக்டர் அரவிந்த்துக்கு பரிந்துரை செய்தார். இதை ஏற்று, சுஜித்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார், சுஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர். இந்த வருடம் இதுவரை 28 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!