விருத்தாசலத்தில் பரபரப்பு கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
5/10/2022 4:31:53 AM
விருத்தாசலம், மே 10: விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை சாலை கல்லூரி நகரில் ஜெக முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. தற்போது இந்த சாலை நெடுஞ்சாலை துறை சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றி சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக ஜெக முத்துமாரியம்மன் கோயில் அகற்றப்படுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் நிர்வாகத்தினர் அப்பகுதியில் உள்ள கல்லூரி நகரில் கோயிலை நிறுவுவதற்கான பணியை மேற்கொள்வதாக தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் கோயில் அமைந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும், இதனால் அப்பகுதியில் பல்வேறு அசம்பாவித சூழ்நிலைகள் உருவாகும் எனக்கருதி பொதுமக்கள் குடியிருக்கும் அப்பகுதியில் கோயிலை அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி நேற்று விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை கல்லூரி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் செல்வராஜ், செயலாளர் கவுன்சிலர் அருண், பொருளாளர் ராஜேந்திரன், வழக்கறிஞர் ராஜீ, நகர்மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் உள்ளிட்ட அப்பகுதியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் குடியிருக்கும் தெருவில் வேறு ஒரு இடத்தில் இருந்த கோயிலைக் கொண்டுவந்து அமைப்பதை நிறுத்த வேண்டும். என வலியுறுத்தினர். பின்னர் கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளி பெண்ணை வீடு புகுந்து பலாத்காரம் வாலிபரை கைது செய்யக்கோரி உறவினர்கள் திடீர் மறியல்
திருமணம் செய்ய மறுத்த காதலனை கரம் பிடித்த இளம்பெண்
2 வருடங்களுக்கு பிறகு நடந்தது கோயில் திருவிழாவில் தீமிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
லாரி டிரைவரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்தவர் கைது
மணல் அள்ளிய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!