SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிஎஸ்ஐ பவள விழா ஆண்டு 3 ேஜாடிகளுக்கு இலவச திருமணம்

5/10/2022 4:29:58 AM

நாகர்கோவில், மே 10:  தென்னிந்திய திருச்சபை பவள விழா ஆண்டை (75வது வருடம்) சிறப்பிக்கும் வகையில் இலவச திருமணம் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ கன்னியாகுமரி பேராயத்தால் நடத்தப்பட்டது.  தென்னிந்திய திருச்சபை 75 வது ஆண்டை கொண்டாடும் இந்த ஆண்டில் அதனை சிறப்பிக்கும் வகையில் பொருளாதார நெருக்கடிகளுடன் வாழும் ஏழை குடும்பங்களின் வாழ்வு சிறக்க இலவச திருமண திட்டம் ‘நம்ம வீட்டு கல்யாணம்’ என்ற பெயரில் ஒழுங்கு செய்யப்பட்டது. முதல்கட்டமாக எளிய குடும்பங்களை சேர்ந்த ஜோடிகளான தம்பி ஆல்வின்ராஜ்- முத்துலட்சுமி, நிஷாந்த்-சந்தியா, ரதீஷ் குமார்- மோனிகா ஆகியோருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

இந்த திருமணம் நேற்று நாகர்கோவில் ஸ்காட் நகர் ஆலயத்தில் வைத்து கன்னியாகுமரி பேராயர் ஏ.ஆர்.செல்லையாவால் நடத்தப்பட்டது. தொடர்ந்து ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி நூற்றாண்டு அரங்கில் வைத்து நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்வில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அப்போது தென்னிந்திய திருச்சபையின் கல்வி பணியையும், சமூக பணிகளையும் பாராட்டி மென்மேலும் சமூக பணியை முன்னெடுத்து செல்ல வேண்டினார். பேராய நலிவுற்றோர் நல்வாழ்வுத்துறை ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்கான ஆயத்த பணிகளை பேராய நிர்வாக செயலாளர் வக்கீல் தினேஷ், நிதி மேலாண்மையாளர் டேவிட் ஜெபராஜ், பேராய பெண்கள் ஐக்கிய சங்க தலைவி பெலிசியா செல்லையா, நலிவுற்றோர் நல்வாழ்வுத்துறை இயக்குநர் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்