ஊட்டச்சத்து நிலையினை கண்டறிய சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர் விபரம் தினசரி சேகரிப்பு
5/10/2022 4:29:43 AM
நாகர்கோவில், மே 10: குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கண்டறிய சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் மாணவர்கள் விபரம் நாள்தோறும் கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இணை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி சத்துணவு மையங்களில் சத்துணவு பயனாளிகளின் ஊட்டச்சத்து நிலையினை கண்டறியும் பொருட்டு பள்ளி திறக்கும் போது மாணவ- மாணவியரின் உடல் நிலை குறியீட்டின் படி கணக்கீடுகளை மேற்கொள்ளுவதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்துவதுடன் உடல் நிலை குறியீட்டின் படி சுகாதாரம் மற்றும் ஊட்டச் சத்து பிரச்சினைகளை தடுப்பது மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இப்பணியின் முக்கிய நோக்கம் ஆகும்.எனவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ மாணவிகளின் தரவுகளை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் நாள்தோறும் உள்ளீடு செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!