SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

5/10/2022 4:21:24 AM


மயிலாடுதுறை,மே 10: மயிலாடுதுறையில் தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாலினி தலைமை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஓய்வுகால உதவித்தொகை பெறும் சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு முறையான ஓய்வு ஊதியம் நிர்ணயம் செய்து அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி திட்டத்தின் பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசாணையின்படி முறையான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பொது வருங்கால வைப்பு நிதி இறுதி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோரிக்கை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்