மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
5/10/2022 4:21:17 AM
நாகை,மே10: திட்டச்சேரி அருகே ஓஎன்ஜிசி அலுவலகம் முன்பு குத்தாலம் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகை மாவட்டம் திருமருகல் அருகே குத்தாலம் பகுதியில் ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மாசு நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. ராமநாதபுரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனத்தில் சுத்திகரிப்பு செய்யும் போது பல மடங்கு உவர்ப்பு தன்மை கொண்ட உப்பு நீர் வெளியேறும். இந்த நீரை டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகிறது. திருமருகல் அருகே குத்தாலம் பகுதியில் அமைந்துள்ள 1800 மீட்டர் அளவில் ராட்சத போர்வெல் மூலம் பூமிக்கடியில் செலுத்தப்படுகிறது. இதனால் கோபுராஜபுரம், நரிமணம், குத்தாலம், திட்டச்சேரி, எராவாஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி வருகிறது. இவ்வாறு நிலத்தடி நீரை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி மாசு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை அகற்ற கோரி சேகர் தலைமையில் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!