சீர்காழி வட்டாரத்தில் மானிய விலையில் குறுவை விதைநெல் வாங்கலாம்
5/10/2022 4:21:10 AM
சீர்காழி, மே 10: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைநெல் ரகங்கள் மானிய விலையில் பெற்று விவசாயிகள் பயனடையலாம் என சீர்காழி வேளாண் உதவி இயக்குனர் ராஜராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சீர்காழி வட்டாரத்தில் குறுவை சாகுபடிக்கு உகந்த ரகங்களான ஆடுதுறை 43, ஆடுதுறை 45, ஆடுதுறை 53, கோ 51, அம்பை 16 ஆகிய குறுகிய கால நெல் ரகங்கள் நன்கு முளைப்புத்திறனுடன், கலவன்கள் இல்லாத, அரசு சான்று பெற்ற விதைகள் சீர்காழி, வைதீஸ்வரன் கோயில், காரைமேடு மற்றும் திருவெண்காடு வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண் விரிவாக்க மையங்களில் மானிய விலையில் குறுவை நெல் விதைகளை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்