கோவிந்தசாமி நகர் கூவம் கரையோர மக்களுக்கு மயிலாப்பூர் பகுதியில் வீடு வழங்க வேண்டும்: எம்எல்ஏ த.வேலு கோரிக்கை
5/10/2022 4:16:09 AM
சென்னை: சட்டப் பேரவையில் நேற்று மயிலாப்பூர் எம்எல்ஏ த.வேலு (திமுக) பேசியதாவது: கடந்த சில நாட்களாக நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் வகையில் அரசு அதிகாரிகள், எங்கள் தொகுதியில் உள்ள கோவிந்தசாமி நகர் கூவம் கரையோர மக்களை அகற்றும் பணியில் ஈடுபடும் போது கண்ணையன் என்பவர் தீக்குளித்து நேற்று அதிகாலை உயிரிழந்திருக்கிறார். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் அவரது குடும்பத்திற்கு உதவிட வேண்டும்.
மேலும் தொகுதி மக்களின் அதாவது கோவிந்தசாமி நகர் மக்களின் சார்பாக ஒரு பணிவான வேண்டுகோள். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே வீடு கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள், இன்றைய சூழ்நிலையில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கான மனநிலைக்கு வந்து விட்டார்கள். அவர்களுக்கு இப்போது தேவை அவர்களுடைய வாழ்வாதாரம் மயிலை பகுதியை சுற்றி, சென்னையை சுற்றியுள்ள காரணத்தினால் மயிலை பகுதியை சுற்றியுள்ள திட்டங்கள் நிறைவேறும் வகையில் உள்ள அந்த வீடுகளை ஒதுக்கித்தர வேண்டும். மேலும் வீடுகளை காலி செய்ய ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும். இவ்வாறு த.வேலு எம்எல்ஏ கூறினார்.
மேலும் செய்திகள்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் கிடப்பில் மழைநீர் கால்வாய் பணி: விரைந்து முடிக்க கோரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ
சென்னை எம்டிசி பஸ்களை தனியாருக்கு வழங்குவதா? அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி
மஸ்கட்டில் சிக்கித் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க வேண்டும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!