மாநகர் போக்குவரத்து கழகத்தில் 16 பணிமனைகள் நவீனமயமாக்கப்படும்: பிரபாகர் ராஜா எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்
5/10/2022 4:15:50 AM
சென்னை: சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது விருகம்பாக்கம் எம்எல்ஏ பிரபாகர் ராஜா (திமுக) பேசுகையில், ‘வடபழனி பேருந்து நிலையத்தை நவீனமயமாக்க வேண்டும். கலைஞர் நகர் பணிமனையில் 1,100 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்குள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்துள்ளதால், இந்த பேருந்து நிலையத்தையும் நவீனமயமாக்க வேண்டும். மேலும், இந்த பேருந்து நிலையங்களில் புட் கோர்ட் அமைத்தால், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்வார்கள். அரசுக்கு வருமானமும் வரும். மேற்கத்திய நாடுகளைப்போல் நவீன விளம்பர பலகைகள் வைத்தால், அதிலும் அரசுக்கு வருமானம் வரும்.
மேலும், 18 எம், 41 எப், 37 டி பேருந்துகள் இயக்கப்படாமல் இருக்கிறது. அதையும் இயக்க வேண்டும். சாதாரண பேருந்துகளான 5இ, 11ஜி, 12ஜி, 70சி, 17டி, எஸ்26, எஸ்86 ஆகிய பேருந்துகளையும் அதிகமாக இயக்க வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘‘வணிக வளாகங்களுடன் பணிமனைகளை நவீனமயமாக்கி வருவாய் ஈட்டுதல் திட்டத்தின் கீழ் சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தின் 16 பணிமனைகள் மற்றும் பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்ச்சி குழும நிதி உதவியுடன் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவன ஒருங்கிணைப்புடன் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெறும்’ என்றார்.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!