வரும் 12ம் தேதி கோலாகலமாக நடைபெறுகிறது ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோயிலில் தேர் திருவிழா: முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆய்வு
5/10/2022 1:39:08 AM
திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த தேவி, பூதேவி சமேத வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை, மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் திருவிழா வரும் 12ம் தேதி வியாழக்கிழமை நடைபெற உள்ளது. திருத்தேர் விழா நடைபெறுவதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து நேற்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், போலீஸ் எஸ்பி வருண்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து திருத்தேர் பவனி வர உள்ள பனகல் தெரு, குளக்கரை தெரு, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு ஆகிய பகுதிகளை கலெக்டர், போலீஸ் எஸ்பி ஆகியோர் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் நடந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது ஆர்டிஓ ரமேஷ், டிஎஸ்பி சந்திரதாசன், கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், தாசில்தார் ஏ.செந்தில்குமார், கோவில் மக்கள் தொடர்பு அதிகாரி எஸ்.சம்பத், இன்ஸ்பெக்டர் பத்ம பபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணராஜ், சக்திவேல், சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தயாராகும் பிரமாண்ட தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயில் எதிரே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 48 அடி உயரம், 21 அடி அகலம் மற்றும் 75 டன் எடை கொண்ட பிரமாண்ட திருத்தேர் அலங்கரித்து தயார்படுத்தும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மேலும் செய்திகள்
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 .80 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை கலெக்டர் வழங்கினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் மூட வேண்டும்; கலெக்டர் உத்தரவு
தவணை பணம் செலுத்தாத வேன் உரிமையாளருக்கு அடி
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; மாவட்ட கலெக்டர் தகவல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபருக்கு குண்டாஸ்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!