கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் செவிலியர்கள் விடுதி
5/3/2022 6:14:22 AM
கம்பம், மே 3: கம்பம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் நிதியில், ரூ.12 லட்சம் செலவில் செவிலியர்கள் தங்கும் விடுதி கட்டிடப்பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தங்கும் விடுதி நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து மருத்துவ ஊழியர்கள் கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கம்பம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, செவிலியர் விடுதி கட்ட ரூ.12 லட்சத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன், திமுக நகர பொறுப்பாளர்கள் வக்கீல் துரை நெப்போலியன்(வடக்கு), சூர்யா செல்வக்குமார்(தெற்கு) மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!