நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தல் திமுக வேட்பாளர்கள் வெற்றி
5/3/2022 6:12:36 AM
சாயல்குடி, மே 3: கடலாடி பகுதியில் பொதுப்பணித் துறை கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர், உறுப்பினருக்கான தேர்தல் 2 இடங்களில் நடந்தது. முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய 3 தாலுகாவை சேர்த்த பொதுப்பணி துறையின் குண்டாறு வடிநில கோட்டம், முதுகுளத்தூரை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் கீழ் பொதுப்பணித்துறை கண்மாய் பாசன நீரினை பயன்படுத்துவோர் சங்கம் மொத்தம் 98 உள்ளது. இதில் கடலாடி தாலுகாவில் உள்ள 31 சங்கத்தில் 29 சங்கங்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் இ.நெடுங்குளத்திற்கு ஒரு தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கும், பி.கீரந்தை, பன்னந்தை, தத்தங்குடி,பூலாங்குளம் ஆகிய 5 கிராமங்களை உள்ளடக்கிய ஒரு சங்கத் தலைவருக்கும், உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தப்பட்டது.
தேர்தல் நடத்தும் அலுவலர் மரகதநாதன் தலைமையிலும், கடலாடி தாசில்தார் சேகர் முன்னிலையிலும் வருவாய் துறையினர் அந்தந்த ஊர் வாக்குச்சாவடி மையத்தில் தேர்தலை நடத்தினர். காலை 7 மணி முதல் மாலை வரை உறுப்பினர்கள் வாக்குகளை செலுத்தினர். மாலையில் வாக்குகள் என்னப்பட்டது. இதில் இ.நெடுங்குளம் சங்கத்திற்கு திமுகவை சேர்ந்த கண்டிலான் பஞ்சாயத்து தலைவர் மணிமேகலை கணவர் முத்துராமலிங்கம், பி.கீரந்தை சங்கத்திற்கு தனிக்கோடி ஆகியோர் வெற்றி பெற்றனர். நெடுங்குளம் முத்துராமலிங்கம் அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் செய்திகள்
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
சுதந்திர தின மாரத்தான் போட்டிகள்
1,459 மையங்களில் தடுப்பூசி முகாம்
வங்கி ஊழியர்களின் மாரத்தான்
6 பவுன் நகை வழிப்பறி
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!