ரத்த பரிசோதனை நிலையத்தில் தீ விபத்து பல லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
4/28/2022 3:10:44 AM
ராஜபாளையம், ஏப். 28: ராஜபாளையம் காமராஜர் நகரில் தனியார் ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு வேலை முடிந்ததும், அலுவலகத்தை அடைத்து விட்டு பணியாளர்கள் சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் அங்கிருந்த இன்வெட்டர் பேட்டரியில் இருந்து கரும்புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் அறை முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. தொடர்ந்து காற்றின் வேகத்தில் கட்டிடம் முழுவதும் தீ பிடிக்க துவங்கியது.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், இது குறித்து நகர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து விட்டு, தீயை அணைத்தனர். மேலும் அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் தீ பரவாமல் தடுத்தனர்.இருப்பினும் இந்த தீ விபத்தில், ரத்த பரிசோதனை அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், ரத்த பரிசோதனை இயந்திரங்கள், நாற்காலி, மேசை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. இவற்றின் மதிப்பு ரூ.பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. விபத்து குறித்து நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!