கொரோனாவை தடுக்கும் நடவடிக்கை பொது இடங்களில் முக கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம்
4/28/2022 12:43:11 AM
நாகை, ஏப்.28: நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நாகை மாவட்டத்தில் கொரோனா 4ம் அலை பரவலில் இருந்து காத்துக்கொள்ள நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இரண்டாவதாக அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள நடவடிக்கை எடுத்து கொள்ளுதல், மூன்றாவதாக நோய் தொற்று பரவலை தடுப்பது மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களை உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் காப்பதும் ஆகும். பேரிடர் மேலாண்மை சட்டம் உரிய அபராதம் விதிக்கவும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல், இருமல், சுவையின்மை, வயிற்றுப்போக்கு, தொண்டை வலி, உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனையில் சோதனை செய்துகொள்ள வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றாது விதிமீறல்களில் ஈடுபடுவோர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போது தவறாது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
நாகை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு
வேதாரண்யத்தில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
கோயில்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டும்
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் புதிதாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமையும் இடம்
அனைவருக்கும் முறையாக கிடைக்க ஒத்துழைக்காதவர்கள்; வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும்: பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரிக்கை
காரைக்கால் கலெக்டராக மொஹமத் மன்சூர் நியமனம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!