நாகர்கோவில் தொடக்கப்பள்ளியில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த தலைமை ஆசிரியர் கைது போக்சோ சட்டத்தில் வழக்கு
4/28/2022 12:41:00 AM
நாகர்கோவில், ஏப். 28: நாகர்கோவிலில் 5ம் வகுப்பு மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் பறக்கை கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் நித்ய லெட்சுமண வேல் (59). இவர் நாகர்கோவிலிலில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக உள்ளார். அந்த பள்ளி 5ம் வகுப்பு மாணவிகள் சிலரிடம் நித்யலெட்சுமணவேல் சில்மிஷத்தில் ஈடுபட்டு, மிரட்டியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சைல்டு ைலன் 1098 மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகியவற்றுக்கு புகார்கள் சென்றன. இந்த புகார் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஷகிலா பானு விசாரணை மேற்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகள் மட்டுமின்றி, அந்த பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணியாளர்கள் சிலரிடமும் ரகசிய விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல், 5ம் வகுப்பு மாணவிகள் 3 பேரிடம் சில்மிஷம் செய்தது தெரிய வந்தது. இது பற்றி குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஷகிலா பானு எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத்திடம் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தற்போது கல்வித்துறை அதிகாரிகள் விசாரணையும் நடந்து வருகிறது. தலைமை ஆசிரியர் நித்ய லெட்சுமண வேல் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என அதிகாரிகள் கூறினர். நித்திய லட்சுமண வேல் ஏற்கனவே நாகர்கோவிலில் மற்றொரு பள்ளியில் பணியாற்றியபோது இது போன்ற புகாரின் அடிப்படையில் தான் தற்போது பணியாற்றும் பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
குமரியில் மீனவர்கள் ஒத்துழைப்புடன் கடலோர கிராமங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்படும்: கலெக்டர் தகவல்
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் 29ம்தேதி தொடக்கம்: 2 அமைச்சர்கள் பங்கேற்பு
குமரி மாவட்டத்தில் கலை பண்பாட்டு துறை விருதுக்கு 15 பேர் தேர்வு: பொற்கிழி, பட்டயம் வழங்கப்படும்
பூதப்பாண்டி அருகே பேராசிரியையை அரிவாளால் வெட்ட முயற்சி: வாலிபர் தப்பி ஓட்டம்
மீன்பிடி தடை காலம் இன்று நிறைவு கடலுக்கு செல்ல தயாராகும் சின்னமுட்டம் மீனவர்கள் படகுகள், வலைகள் புதுப்பிப்பு
முட்டம் இரட்டை கொலையில் கஞ்சா கும்பலை சேர்ந்த 2 பேர் சிக்கினர் அயன்பாக்சால் தலையில் சரமாரி தாக்கி கொன்றதாக தகவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!