வேப்பூர் கிராமத்தில் நாராயண பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
4/26/2022 3:53:13 AM
குன்னம்,ஏப்.26: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள வேப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள நாராயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் கோபுர விமான சுதை சிற்ப பஞ்சவர்ண வேலைகள் புதுப்பிக்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன. திருப்பணி வேலைகள் முடிந்ததை அடுத்து இந்தகோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதையட்டி கோயில் முன்பு யாகசாலை கட்டப்பட்டன முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, அங்குரார்பணம், ரக்ஞாபந்தனம், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், பூர்ணாகதி, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 8 மணியளவில் மகா தீபாராதனை உட்பட பூஜைகள் நடந்தன. பின்னர் சுமார் 10.30 மணியளவில் யாகசாலையில் இருந்து வேத விற்பன்னர்கள் கலசங்களை சுமந்து, மேளதாளங்களுடன் கோயிலை வலமாக வந்தனர். தொடர்ந்து நாராயன பெருமாள் கோயில் விமான கலசங்களின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுது. இதையொட்டி பக்தர்கள் மீது மஞ்சள் கலந்து புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் அனைவருக்கும் விபூதி, மஞ்சள் குங்கும பிரசாதங்கள் வழங்கப்பட்டன. குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் செய்திகள்
அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு
மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...