SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை மழையால் தண்ணீர் வரத்து அதிகரிப்பு பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்வு

4/25/2022 2:55:16 AM

நாகர்கோவில், ஏப்.25: குமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியாக உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு சரால் மழையும், அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று காலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை காணப்பட்டது. அதிகபட்சமாக பாலமோர் பகுதியில் 39.4 மி.மீ மழை பெய்திருந்தது. சுருளோடு 37.2, புத்தன் அணை 28.5, பெருஞ்சாணி 30, பேச்சிப்பாறை 13.8 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 39.98 அடியாக இருந்தது.

அணைக்கு 314 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. பெருஞ்சாணி நீர்மட்டம் 38 அடியாக இருந்தது. அணைக்கு 316 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. சிற்றார்-1ல் 9.45 அடியாக நீர்மட்டம் இருந்தது. சிற்றார்-2ல் 9.54 அடியாக நீர்மட்டம் இருந்தது. பொய்கை அணை நீர்மட்டம் 19 அடியாகும். மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 9.19 அடியாகும். அணைகள் மூடப்பட்டிருந்தது. முக்கடல் அணையில் 9.30 அடியாக நீர்மட்டம் காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 40 அடியை எட்டியுள்ளது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கோடை மழை கணிசமாக பெய்து வருவதும், அதனால் நீர்மட்டம் உயர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது ஆகும். இருப்பினும் நேற்று காலை முதல் மீண்டும் வெயில் கொளுத்தியது. பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்