SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போக்குவரத்து விதிமுறை மீறல் குமரியில் 2 நாளில் 4,360 பேருக்கு அபராதம் போலீஸ் அதிரடி சோதனை

4/25/2022 2:55:09 AM

நாகர்கோவில், ஏப்.25 : குமரி மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறியதாக கடந்த இரு நாளில் 4,360 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் சாலை விபத்துக்களை குறைக்கும் வகையில் காவல்துறையினர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்ெகாண்டு வருகிறார்கள். குறிப்பாக ஹெல்மெட் அவசியம் தொடர்பாக, எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் நேரடியாக பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார். மாவட்டத்தில் முக்கிய சந்திப்புகளில் எஸ்.பி.யே நேரடியாக களமிறங்கி வாகன சோதனை நடத்தி, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வருவது, பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதன் காரணமாக தற்போது ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 விழிப்புணர்வு பிரசாரம் ஒருபுறமிருக்க, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டுபவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆர்.சி.புக், லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்டவற்றுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. நோ பார்க்கிங் பகுதியில் பார்க்கிங் செய்யப்பட்டுள்ள வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 22 மற்றும் 23ம் தேதிகளில் சேர்த்து மொத்தம் 4,360 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் இல்லாமல் வந்து சிக்கியவர்களே அதிகம் ஆவர்.
 இதில் 22ம்தேதி 2,233 பேருக்கும், 23ம் தேதி 2135 பேரும் காவல்துறையினரிடம் சிக்கி அபராத விதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். போலீஸ் வாகன சோதனையின் போது நிற்காமல் செல்பவர்கள் மற்றும் பைக் ரேஸில் ஈடுபடுகிறவர்கள் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காலை மற்றும் மாலை வேளைகளில் முக்கிய சந்திப்புகளில் போலீசார் நடத்தும் வாகன சோதனையை தீவிரப்படுத்த எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகில் வாகன சோதனை நடத்தி, ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டி வருபவர்கள், அளவுக்கு அதிகமாக மாணவ, மாணவிகளை ஏற்றி வரும் ஆட்டோ டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்