SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி மாணவர்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு

4/21/2022 8:11:30 AM

திருச்சுழி, ஏப்.21: திருச்சுழி அருகே தீ விபத்து தடுப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தீயணைப்புத்துறை சார்பில் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை தீத்தொண்டு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி திருச்சுழி பகுதி கிராமங்களில் தீ விபத்துகள் குறித்தும், தீ விபத்து ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் பொதுமக்களுக்கு தீயணைப்பு படைவீரர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி திருச்சுழி தீயனைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் மடத்து பட்டியில் உள்ள மீனர்வா பப்ளிக் பள்ளியில் உள்ள மாணவ,மாணவிகளுக்கு தீ தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம் முகாமை சிறப்பு நிலை அலுவலர் முனிஸ்வரன் தலைமையில் பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு பின் கசிவு கேஸ் சிலிண்டர் கசிவு காரணமாக தீ விபத்துக்கள் ஏற்பட்டால் தவிர்ப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மாணவ மாணவியர்களுக்கு முன்பாக செயல் விளக்கம் அளித்தனர்.

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீத்தொண்டு நாள் விழா, வார விழா இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. தீ பாதுகாப்பை அறிவோம், உற்பத்தியை அதிகரிப்போம் என்ற வாசகத்தின் அடிப்படையில் தீ விபத்து குறித்து மற்றும் சிறப்பு பிரிவில் செயல்பாடு குறித்து செயல்முறைகள் விளக்கம் ஒத்திகை ஆசிரியா் மற்றும் மாணவா்களுக்கு தீயணைப்பு துறையினா் அளித்தனர். நிலைய அலுவலா் பாலநாகராஜ் தலைமையில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. விபத்து காலங்களில் எப்படி காப்பற்றுவது, எப்படி தப்பித்துக்கொள்வது என்ற செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது. தலைமையாசிரியா் ராஜசேகரன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். ஆசிரியா் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்