SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீராத போக்குவரத்து நெரிசல் தினமும் அவதிப்படும் திருத்தங்கல் மக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

4/21/2022 8:10:49 AM

சிவகாசி, ஏப்.21: சிவகாசி அருகே திருத்தங்கல் மெயின்ரோடு சாலை ஆக்கிரமிப்பு காரணமாக தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றது.
சிவகாசி அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் திருத்தங்கல் உள்ளது. சிவகாசி-திருத்தங்கல் சாலையை பள்ளி, கல்லூரி வாகனங்கள், தீப்பெட்டி, பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் வாகனங்கள், ஆயிரக்கணக்கான டூவீலர்கள் தினமும் இரு மார்க்கமாக பயன்படுத்தி வருகின்றன. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த சாலை அகலப்படுத்தப்படாததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், விபத்து நடப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் திருத்தங்கல் நுழைவு பகுதியில் ரயில்வே கேட் உள்ளதால் ரயில் வந்து செல்லும் நேரங்களில் பெரும் நெருக்கடியில் இந்த சாலை சிக்கி தவிக்கின்றது.
மேலும் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படும் லாரிகளால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். ஆபத்து மிகுந்த இந்த சாலையில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 70ஐ தாண்டி இருக்கும். சாலைக்கேற்ற வகையில் வாகன ஓட்டிகளும் மெதுவாக செல்வது கிடையாது. வாகன ஓட்டிகள் முந்தி செல்ல முயல்வதால் விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர்.

சாலையோரஙகளில் குவிந்து கிடக்கும் மண்களால் டூவீலர்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைகின்றனர். சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். திருத்தங்கல் ரயில்வேகேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சுற்றுச்சாலை திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாலையை போர்க்கால அடிப்படையில் அகலப்படுத்த வேண்டும் என்றும் சாலையோரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், சாலையோரங்களில் குவிந்து கிடக்கும் மண்களை அகற்ற வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்