போட்டிகளே பக்குவப்படுத்தும் முன்னாள் துணைவேந்தர் பேச்சு
4/21/2022 8:04:33 AM
காரைக்குடி, ஏப்.21: காரைக்குடி ராஜராஜன் பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு விழா நடந்தது.
மாணவர்களுக்கு பரிசு, சான்று வழங்கி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர், கல்விக்குழு ஆலோசகர் பேராசிரியர் சுப்பையா பேசுகையில், மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளன.
அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த முடியும். மாணவர்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். பரிசும் பாராட்டும் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும். போட்டிகளே மாணவர்களை பக்குவப்படுத்தும். பரிசு முக்கியம் தான். ஆனால் பரிசே முக்கியமல்ல. வெற்றி, தோல்வியை ஒரே மாதிரி பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். விளையாட்டு போட்டிகளிலேயே இந்த மனப்பான்மை வளரும். வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் கொழுந்துவிட்டு எரிய வேண்டும். பாடத்தை தாண்டி பலவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் செய்திகள்
முன்னாள் படைவீரர் குறைதீர் முகாம்
தேவகோட்டை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயம்
காரைக்குடி பள்ளியில் நூல் வெளியீட்டு விழா
திருப்புத்தூரில் பெண்கள் கஞ்சிக்கலயம் ஊர்வலம்
அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
வங்கி சர்வர் முடக்கத்தால் அவதி
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!