நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
4/21/2022 7:43:28 AM
ஈரோடு, ஏப். 21: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கியது போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு வழங்க வலியுறுத்தி ஈரோட்டில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாநில துணை தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.1.2022 முதல் 3 சதவீத அகவிலைப்படி அறிவித்துள்ளதுபோல, மாநில அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும். விப்ரோ வசம் உள்ள ஐஎப்எச்ஆர்எம்எஸ் திட்டத்தில் உள்ள குளறுபடிகள் மற்றும் குறைகளை சரி செய்து தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
கொரோனாவை காரணம் காட்டி 2 ஆண்டுகள் முடக்கப்பட்ட சரண் விடுப்பு ஒப்புவிப்பினை காலம் குறிப்பிடாமல் தடை செய்ததையும், அரசாணை எண் 36னையும் திரும்ப பெற வேண்டும். நீதித்துறையில் தற்காலிக பணியாளர்களை, நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் சுபநிதி, வட்டக்கிளை நிர்வாகி ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!