பூச்சி மருந்தை குடித்து விட்டு எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த நபர் மருத்துவமனையில் அனுமதி
4/20/2022 7:51:43 AM
விருதுநகர், ஏப். 20: ராஜபாளையம் சுந்தரநாச்சியார்புரத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (40). இவர், நேற்று பூச்சிமருந்து குடித்து விட்டு விருதுநகர் எஸ்பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார். அங்கிருந்த போலீசார், அவரை விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், அருள்ராஜ் திருவில்லிபுத்தூரில் உள்ள பால்கோ கடை ஒன்றில் கடந்த மாதம் பால்கோவா வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் பல்லி இருந்ததாக கூறி வாந்தி எடுத்து பிரச்னை செய்துள்ளார்.
இதுகுறித்து கடையினர், கடையின் பெயரை கொடுக்க சதி செய்வதாக அருள்ராஜ் மீது திருவில்லிபுத்தூர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். அதன்பின்பு, போலீசார் அருள்ராஜை சத்தம் போட்டு அனுப்பி உள்ளனர். இந்நிலையில் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி பூச்சி மருந்து குடித்துவிட்டு எஸ்பி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தது தெரியவந்தது. சூலக்கரை போலீசார் அருள்ராஜ் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!