குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பள்ளம் மூடப்பட்டது ரெங்கப்பநாயக்கர்பட்டி மக்கள் மகிழ்ச்சி
4/20/2022 7:51:25 AM
வத்திராயிருப்பு, ஏப். 20: வத்திராயிருப்பு அருகே ரெங்கப்பநாயக்கர்பட்டி ரேஷன் கடையில் இருந்து பஜார் வரை செல்ல கூடிய தெருவில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், ரெங்கப்பநாயக்கர்பட்டி ஊராட்சியில் இருந்து குடிநீர் குழாய் கொடுப்பதற்காக பேவர் பிளாக் கற்கள் தோண்டப்பட்டது. ஆனால், அதன்பின் முறையாக மூடப்படாததால், 5 இடங்கள் வரை பள்ளமானது. இதனால், அந்த வழியே சென்றவர்கள் பள்ளத்தில் தடுமாறி விழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது
இதுகுறித்து, தினகரன் நாளிதழிலில் படத்துடன் செய்தி வௌியானது. இதன் எதிரொலியாக, குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட இடத்தில் சிமெண்ட் போட்டு சரி செய்யப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், அந்த இடத்தில் மீண்டும் பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும் என கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ராஜபாளையத்தில் காற்று மழையால் மரங்கள் சாய்ந்தன
ஆதார் சேவைகளுக்கு சிறப்பு முகாம்
பயிற்சியாளரே இல்லாமல் யோகாவில் தங்கம்,வெண்கலம் வென்ற சகோதரிகளுக்கு உற்சாக வரவேற்பு
ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
மஞ்சப் பை வழங்கல்
வேளாண் இயந்திரங்கள் பழுது நீக்க மையம் அமைக்க மானியம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!