SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இல்லம் தேடி கல்வி மையம் அமைக்கும் பணிகள் தீவிரம்

4/20/2022 7:50:56 AM

திருவில்லிபுத்தூர், ஏப். 20: விருதுநகர் மாவட்டத்தில் புதிய இல்லம் தேடி கல்வி மையங்கள் அமைப்பதற்கான பணி துவங்கியுள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார். திருவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன்கோவில் பகுதிகளில் இல்லம் தேடி கல்வி மையங்களை உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: விருதுநகர் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளைக் கண்டறிந்து புதிய இல்லம் தேடி கல்வி மையங்கள் தொடங்கி, தன்னார்வலர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மையம் மற்றும் தன்னார்வலர் தேவைப்படும் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று (ஏப். 20) புதன்கிழமைக்குள், ஒவ்வொரு ஒன்றியத்திலும் உள்ள வட்டார வளமையத்தில் தெரிவிக்க வேண்டும். எனவே, தலைமையாசிரியர்கள் தனிக்கவனம் செலுத்தி, குடியிருப்புப் பகுதிகளில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்