பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்
4/20/2022 7:29:04 AM
ஈரோடு, ஏப். 20: பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 14 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை நேற்று கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர் தடகளப் போட்டி, குண்டு எறிதல், வட்டு எறிதல் மற்றும் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நேற்று ஈரோடு சிஎஸ்ஐ பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
போட்டிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள நடுநிலை, மேல்நிலை, உயர்நிலை, சுயநிதி, நிதியுதவி மற்றும் மெட்ரிக் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
போட்டிகளில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு பெறும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகளில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளிலும், இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் அடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளிலும் பங்கேற்க உள்ளதாக அதிகாரிகள் கூறினர். இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்