ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டம்
4/19/2022 4:35:30 AM
பொன்னமராவதி, ஏப்.19: பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. பொன்னமராவதி அருகே உள்ள ஆர்.பாலகுறிச்சி முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த மார்ச் 26ம் தேதி பூத்திருவிழாவுடன் தொடங்கியது. தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதியுலா மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்றது. தேரோட்டத்தில் முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருள தேரினை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. விழாவில் விடத்தலாம்பட்டி, ரெகுநாதபட்டி, வைரம்பட்டி, சீகம்பட்டி, கோபால்பட்டி, கிழவயல், கட்டுக்குடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சார்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர். உலகம்பட்டி போலீசார் பாதுகாப்பினை செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்
பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!