ஆவடி மாநகராட்சியில் ரூ.2.5 கோடியில் அறிவுசார் மைய கட்டிடம்: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
4/12/2022 6:04:35 AM
ஆவடி: ஆவடி அருகே ரூ.2.5 கோடி மதிப்பிலான அறிவுசார் மைய கட்டிடத்தை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அடிக்கல் நாட்டினார். தமிழக அரசு மூலம் ஆவடி மாநகராட்சிக்கு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் அறிவுசார் மையம் அமைக்க உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் ஆவடி அருகே இந்து கல்லூரியில் மாணவர்கள் பயன்பாட்டிற்காக அறிவுசார் மையம் கட்டிடம் ரூ.2.5 கோடியில் அமைகப்படுகிறது. இதன் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு பூமிபூஜை செய்தார். அப்போது அவர் பேசுகையில், `ஆவடியில் விளையாட்டு அரங்கம் விரைவில் தொடங்கப்படும்’ என்றார். இதில் ஆவடி மாநகர மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார், ஆவடி மாநகர ஆணையர் சரஸ்வதி, ஆவடி மாநகர செயலாளர் நாராயண பிரசாத், 4வது மண்டல குழுத்தலைவர் ஜோதி லட்சுமி, நாராயண பிரசாத், 14வது நகரமன்ற உறுப்பினர் ராஜேஷ், மாமன்ற உறுப்பினர் மற்றும் வட்டச் செயலாளர்கள் மற்றும் திமுக உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
குளம், குட்டை அமைத்தல், தூர்வாருதல் இணையத்தில் பதிவேற்றுவது குறித்த கலந்துரையாடல் கூட்டம்
48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1 .80 கோடி மதிப்பீட்டில் வீடு கட்ட ஆணை கலெக்டர் வழங்கினார்
சுதந்திர தினத்தை முன்னிட்டு 15ம் தேதி டாஸ்மாக் கடைகள் பார்கள் மூட வேண்டும்; கலெக்டர் உத்தரவு
தவணை பணம் செலுத்தாத வேன் உரிமையாளருக்கு அடி
சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் 50% அரசு மானியத்துடன் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது; மாவட்ட கலெக்டர் தகவல்
ரேஷன் அரிசி கடத்திய வாலிபருக்கு குண்டாஸ்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!