SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்திய ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு தகுதி தேர்வு

4/12/2022 2:51:06 AM

நாமக்கல், ஏப்.12: இந்திய ராணுவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான தகுதி தேர்வு வரும் ஜூன் 4ல் நடக்கிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: டேராடூனில் உள்ள ராஷ்டிரிய இந்தியன் ராணுவக் கல்லூரியில், 2023ம் ஆண்டு ஜனவரியில் துவங்கும் வகுப்புகளுக்கு, சேர்க்கைக்கான தகுதித்தேர்வு வரும் ஜூன் 4ம் தேதி நடக்கிறது. ராணுவ கல்லூரியில் சேர அனுமதிக்கப்படும்போது, 2023 ஜனவரி 1ல், அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அல்லது 7ம் வகுப்ப படித்துக்கொண்டிருக்கும் 2010 ஜனவரி 2ம் தேதிக்கும், 2011 ஜூலை 1 தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஆண் சிறார்கள் மட்டுமே, விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள். விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி, எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

கட்டணத்தை ‘The Commandant RIMC, Dehradun என்ற பெயரில், State Bank of India, Tel Bhavan, Dehradun (Bank Code-01576), Uttarakhandல் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாகப்பெற்று, ‘The Commandant, Rashtriya Indian Military College, Dehradun Cantonment, DEhradun 248 003, Uttarakhand State’ என்ற முகவரிக்கு, தனிநபர் விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். டேராடூனில் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, இரட்டைப் பிரதிகளில், ‘Controller of Examinations, Tamil nadu public Service commission, Chennai 600 003’, என்ற முகவரியில், வரும், 25ம் தேதி மாலை, 5:45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தொடர்ந்து, ஜூன் 4ம் தேதி நடக்கும் எழுத்துத் தேர்வு, ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத முடியும். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு, நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்