வாட்ஸ்அப் வாய்ஸ் ரெக்கார்டிங்கை வைத்து கொலையை தடுத்து நிறுத்திய போலீசார்; கூலிப்படையுடன் ரவுடி கைது
4/12/2022 2:03:21 AM
பெரம்பூர்: புளியந்தோப்பு கன்னிகாபுரம் விளையாட்டு மைதானத்தில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நேற்று முன்தினம் மாலை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, போதையில் அங்கு வந்த கன்னிகாபுரத்தை சேர்ந்த ரவுடி மணி (23), கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த இளைஞர்களிடம் இருந்த 5 செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து இளைஞர்கள் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, செல்போன் சிக்னலை வைத்து, ராயபுரம் பகுதியில் கத்தியுடன் இருந்த மணி மற்றும் 17 வயது சிறுவனை மடக்கி பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், மணியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தபோது, வாட்ஸ்அப்பில் அவர் பேசிய வாய்ஸ் ரெக்கார்டிங் ஒன்று இருந்தது. அதில், திருவொற்றியூரை சேர்ந்த கார்த்திக் (எ) மிக்சர் கார்த்திக்கை நேற்று முன்தினம் மாலை கூட்டாளிகளுடன் சேரந்து கொலை செய்ய இருப்பது தெரியவந்தது. உடனே, போலீசார் இதுகுறித்து திருவெற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், மிக்சர் கார்த்திக் ஏற்கனவே திருவொற்றியூரை சேர்ந்த பாண்டியனை கொலை செய்துள்ளார். இதனால், பாண்டியனின் மைத்துனர் தமிழ் பழிக்குப்பழியாக மிக்சர் கார்த்திக்கை கொலை செய்யும்படி மணியிடம் கூறி, அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மணியின் கூட்டாளிகளான தமிழரசன், வசந்த், கார்த்திக், பிரபாகரன் ஆகிய 4 பேரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர். இதேபோல், புளியந்தோப்பு போலீசார் மணி மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர். உரிய நேரத்தில் விசாரணை நடத்தி, வாலிபர் கொலையை போலீசார் தடுத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இளம்பெண் தற்கொலை வழக்கில் கள்ளக்காதலன் அதிரடி கைது; கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது
மடிப்பாக்கம் சபரி சாலையில் குப்பை குவியலால் துர்நாற்றம்; அகற்ற கோரிக்கை
நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு; கோயில் அகற்றம் வழக்கு தொடர்ந்தவரின் வீடும் இடிப்பு
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்
கடை பூட்டை உடைத்து ரூ.70 ஆயிரம் கொள்ளை
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!