வலங்கைமான் குடமுருட்டி ஆறு படித்துறை ஈமக்கிரியை மண்டபம் அருகில் காட்சி பொருளான சூரிய ஒளி மின் கம்பம்
4/11/2022 4:53:54 AM
வலங்கைமான், ஏப். 11: கடந்த அதிமுக ஆட்சியில் அவசரகதியில் வலங்கைமான் பேரூராட்சியில் அமைத்த நாள் முதல் எரியாமல் உள்ள சூரிய மின்தகடு விளக்கினை சீர்செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சூரிய ஒளியில் மின்னேற்றம் பெற்று இரவில் ஒளிரும் மின்கம்பங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அவசர கதியில் சில மாதங்களுக்கு முன்னர் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அவை கோல்டன் சிட்டி கம்பி கார சந்து வாதம்ஸ் கார்டன் மற்றும் குடமுருட்டி வழி நடப்பு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டது. அதில் 11வது வார்டு குடமுருட்டி வழிநடப்பு படித்துறை அருகே பேரூராட்சிக்கு சொந்தமான இறந்தோருக்கு திதி கொடுக்கும் மண்டபம் அருகே உள்ள மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் அது அமைக்கப்பட்ட நாளில் இருந்தே எரியவில்லை. வெறும் காட்சிப் பொருளாக உள்ள சோலார் மின் விளக்கினை உடனடியாக சரி செய்து தர பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
முத்துப்பேட்டையில் வெறி நாய் கடித்து 6 ஆடுகள் பலி
திருவாரூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பி வைப்பு
மண்டல இணை பதிவாளர் தகவல் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை பெற அைழப்பு
வளங்களை அள்ளித்தரும் ஆடி 18ம் பெருக்கு விழா இன்று நீர்நிலைகளில் கொண்டாட சிறப்பான ஏற்பாடு
முத்துப்பேட்டை அருகே புரசாங்கன்னி குளத்தில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!