பள்ளத்தூர் பகுதியில் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பேரூராட்சி சேர்மன் உறுதி
4/7/2022 5:42:42 AM
காரைக்குடி, ஏப்.7: காரைக்குடி பள்ளத்தூர் பேரூராட்சி முதல் கூட்டம் நடந்தது. செயல்அலுவலர் உமாமகேஷ்வரன் வரவேற்றார். பேரூராட்சி சேர்மன் சாந்தி சிவசங்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ருக்மணி முன்னிலை வகித்தார். உறுப்பினர்கள் முத்து, கணேசன், மஜீத், வெள்ளையம்மாள், மீனாள், தெய்வானை, பெரியசாமி, குமார், கருப்பையா, சோலைமலை, வடிவேல், சரோஜா, வள்ளிக்கண்ணு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தலைவர் சாந்தி சிவசங்கர் பேசுகையில், ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தலை நடத்தி மகத்தான வெற்றி பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு நகரின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம். இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.
உறுப்பினர் சோலைமலை, பேரூராட்சியின் வருமானத்தை உயர்த்த வணிகவளாகம் கட்டலாம். பூங்கா அமைய உள்ள பகுதியில் வணிக வளாகம் கட்ட வேண்டாம். கருப்பையா, பேரூராட்சி திருமண மண்டபம் கட்டணம் உயர்த்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குடிநீர் மோட்டார் மூலம் திருடுவதை தடுக்க வேண்டும். சாலை, தெருவிளக்கு, குடிநீர் என அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும்.
வடிவேல், கோழி கழிவுகளை கண்மாயில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.
சரோஜா, அரிசி ஆலையில் இருந்து வெளியேறும் தூசியால் பல்வேறு நோய் ஏற்படுகிறது. அரிசி ஆலை கழிவுநீர்களை கண்மாயில் விடுகின்றனர். இதனால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது.
செயல்அலுவலர் உமாமகேஷ்வரன், விதிமுறை மீறி செயல்படும் ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கழிவுநீருக்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும். ஜல்சக்தி அபியான் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட உள்ளது என்றார்.
மேலும் செய்திகள்
மழைநீர் வடிகால்களில் அடைப்பு நீக்கும் பணி
வழிப்பறி செய்த சகோதரர்கள் கைது
சுதந்திர தின பவளவிழாவை முன்னிட்டு மேலூரில் காங்கிரசார் நடைபயணம்
மதுரை அருகே விபத்தில் ஓய்வு தலைமையாசிரியர் பலி லாரி டிரைவர் கைது
வீடு புகுந்து 8 பவுன் திருட்டு
வரதட்சணை புகாரில் கணவர் கைது
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!