வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்
4/2/2022 12:09:26 AM
வேலூர், ஏப்.2:வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை வழங்குவதற்கு www.tn.gov.in இணையதளம் மூலம் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள இறப்பை உறுதி செய்யும் குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி நிவாரண நிதியுதவி வழங்குவது தொடர்பாக வழிமுறைகளை தெரிவித்துள்ளது. கடந்த 20ம் தேதிக்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் www.tn.gov.in என்ற இணைய முகவரியில் வருகிற மே மாதம் 18ம் தேதிக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.கடந்த 20ம் தேதிக்கு பின்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.மேற்குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம். இவ்வாறு பெறப்படும் முறையீட்டு மணுவினை ஒவ்வொரு இனமாக தகுதியின் அடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும். எனவே கொரோனா தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினர் மேற்கண்ட உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்
ேவலூர் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு ஒருநாள் புத்தாக்க பயிற்சி எம்எல்ஏ, மேயர் பங்கேற்பு
திருவலம் பேரூராட்சியில் பணி நியமனம், வரிமேல் முறையீட்டுக் குழு உறுப்பினர் திமுகவினர் போட்டியின்றி தேர்வு
கூட்டுறவு வங்கி பேரவைக்கூட்டம் குடியாத்தத்தில்
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் பேரணாம்பட்டு ஆதிதிராவிட நல மேல்நிலைப்பள்ளியில்
வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற குழு விரைவில் வருகை கலெக்டர் தகவல் பொதுப்பிரச்னையை 20ம் தேதி தெரிவிக்கலாம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!